விவரம் விளக்கம்
அறிவிப்பு நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், புதுக்கோட்டை மண்டலம்
நாள் மற்றும் எண் நாள்: 21.11.2025; ந.க.எண்.3/5671/2025
பணிகளின் பெயர் 1. பருவ கால பட்டியல் எழுத்தர் (ஆண்கள் மற்றும் பெண்கள்)
2. பருவ கால காவலர் (ஆண்கள் மட்டும்)
மொத்த காலிப் பணியிடங்கள் பட்டியல் எழுத்தர்: 30
காவலர்: 50
கல்வித் தகுதி பட்டியல் எழுத்தர்: இளங்கலை அறிவியல் / வேளாண்மை / பட்டியல் பட்டப்படிப்பு (B.A./B.Sc./B.Com./B.E. போன்ற ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம்).
காவலர்: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் (சம்பளம்) பட்டியல் எழுத்தர்: ரூ.5285/- + ரூ.3449/- (அகவிலைப்படி) மற்றும் ஒரு நாளுக்கு போக்குவரத்துப்படி ரூ.120/-
காவலர்: ரூ.5218/- + ரூ.3449/- (அகவிலைப்படி) மற்றும் ஒரு நாளுக்கு போக்குவரத்துப்படி ரூ.100/-
வயது வரம்பு
(01.07.2025 அன்று) பொதுப் பிரிவு (OC): 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC/DNC/BC/BC(M)): 34
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் (SC/ST/SC(A)): 37
விண்ணப்பம் பெறுதல் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மண்டல மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் விநியோகிக்கும் நாள் 24.11.2025 முதல் அலுவலக வேலை நாட்களில்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 03.12.2025 மாலை 5.00 மணி வரை.
சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மண்டல மேலாளர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை 622002.